என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பவுர்ணமி கிரிவலம்"
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
- இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று பவுர்ணமி வந்தது. தொடர்ந்து 2-வது பவுர்ணமியும் இந்த புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8 மணியளவில் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாதத்தின் நிறைவு நாளான 31-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5.38 மணியளவில் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மேலும் கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
- கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16-ந்தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 17-ந்தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது.
இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- தாம்பரத்திலிருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.
- ரெயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரம்:
சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு MEMU ரெயில் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.
தாம்பரத்திலிருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.
அதே ரெயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை, குளிர் சாதன வசதி கொண்ட 30 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்படும்.
- கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பவுர்ணமி தினமான (புதன்கிழமை) சென்னையில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 330 பஸ்களும், பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
இதுமட்டுமின்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை, குளிர் சாதன வசதி கொண்ட 30 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்படும்.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசுப் பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
- வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- விசேஷ நாட்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி இயக்கப்படும் பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும்.
திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
வரும் 24ம் தேதி முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
- ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
திருவண்ணாமலை:
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.
வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும்.
திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.
அதனைத்தொடர்ந்து வேலூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நீட்டிப்பு ரெயில் சேவை மே 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை நீட்டிப்பு சேவை இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை தொடங்கியது. ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
- சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.
- ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோவிலாகும்.
பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் ஈசன் இங்கு உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு.
சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது.
சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது.
லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும்.
இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெறுவார்கள்.
உடல் முழு உற்சாகம் அடையும் என்பது பக்தர்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.
- பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
சென்னை:
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாள் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
- அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
- பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.
கிரிவலத்தையொட்டி தமிழகம் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.
கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோவில், இடுக்குப் பிள்ளையார் கோவில்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.
தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.
எனவே, அருணாசலேஸ்வரர் கோவில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
தொடர்ந்து இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, தைப்பூச நட்சத்திரம் இன்று காலை 9.14 மணிக்கு தொடங்கியது.
எனவே, கிரிவலப் பாதை யில் உள்ள ஈசான்ய குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நடந்தது.
இதைத் தொடர்ந்து, தவில், நாதஸ்வரம் இசை முழங்க ஈசான்ய குளக்கரையில் அண்ணாமலையார் எழுந்தருளினார். வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்